அனைவருக்கும் இனிய பொங்கல், தமிழ் மரபுத்திங்கள் வாழ்த்துகள்!

தமிழீழ  மற்றும் தமிழின அழிப்பு ஆவணங்களை இணைய வழியில் பாதுகாக்கும் பொறிமுறை பயன்பாட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது.

மேலுள்ள இணையத்தில் உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பங்கு கொண்டு தமிழீழ வரலாறு மற்றும் தமிழின அழிப்பு பற்றிய  ஆவணங்களை தரவேற்றி அவற்றை பல ஆண்டுகள் இலகுவில் அழிந்து விடாது பாதுகாக்க முடியும்.  கடந்த மூன்று ஆண்டுகளாக பாரிய மென்பொருள் செயல் திட்டங்கள் மற்றும் தமிழின ஆவண நினைவகத்தின் தொடர்ந்த நிதி பங்களிப்பு ஊடாக இந்த தளம் தமிழ் உணர்வாளர்களின் பாவனையில் உள்ளது. இந்த தளத்தில் ஆவணங்கள் (pdf, doc..), காணொளிகள், ஒலி வடிவங்கள்,  படங்கள் என்பனவற்றை தரவேற்றம் செய்யலாம். வலைப்பதிவு, சமூக தளம், கருத்து தளம் என பல செயலிகளும் இதில் உள்ளன.  ஆவணங்களை இணைக்க  இவற்றைப் பயன்படுத்தலாம். நீண்ட காணொளிகளையும் தரவேற்றம் செய்ய முடியும். தொடர்ந்து வரும் வருடங்களில் தரவுகளை அட்டவணைபடுத்தி ஆய்வு அறிக்கைகளையும் இணைக்க உள்ளோம்.

Tamil Genocide Memorial (TGM) wishes everyone a Happy Thai Pongal and Tamil Heritage Month!

In the past decade, thousands of Tamil Eelam and Tamil Genocide-related digital artifacts were purposefully removed by major social media platforms such as Facebook. In order to suppress Tamil History, these platforms cite the continuing ban on Tamil freedom fighters. Historically, South African leader Neilson Mandela was also banned for several years. Tami Diaspora knows that Tamil historic artifacts will be legalized on these platforms in the future. However, if the materials are lost, they can not be retrieved in the future. In order to preserve the Tamil historic content, TGM introduced the platform (https://tamilgenocide.com/) where Tamil activists can create their own accounts, and upload and organize the digital artifacts. The platform will provide the facility to duplicate and preserve the content easily in the future.

Thank you.

Tamil Genocide Memorial, a registered non-profit organization in Canada www.tamilgenocide.com