The summits offer a venue for Tamil organizations, politicians, activists, and civil society representatives worldwide to explore, research and plan for the Tamil diaspora’s role in advancing justice for Eelam Tamils. For more details about this year’s Summit, please visit https://fgto.org/global-tamil-summit/summit-2023/
The followings are the highlighted items from Tamil’s common principles that the summit will focus on.
The essence of Tamil’s common position on Tamil Eelam struggle for freedom and justice
- An Internationally Monitored Referendum for the Eelam Tamils and the Diaspora to determine their Permanent Political Solution.
- An Interim Governing Mechanism for the Eelam Tamils to govern and protect themselves and their lands, until the Referendum is held.
- The referral of the situation in Sri Lanka to (1) the International Criminal Court (ICC) with respect to genocide, crimes against humanity and war crimes, and crimes of aggression and apartheid; and (2) legal action against Sri Lanka before the International Court of Justice (ICJ) under the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, the Convention against Torture, and crimes of aggression and apartheid.
தமிழர்களின் தமிழீழ விடுதலை மற்றும் நீதிக்கான பொதுக் கொள்கைகள்
1. 1948 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்து இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதியில் (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்) தொன்று முதல் இன்று வரை வாழ்ந்துவரும் மக்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் பெரிதும் விரும்பும் சனநாயக, அமைதியான மற்றும் நிரந்தர அரசியல் தீர்வை நிறைவேற்றும் பொருட்டு, சர்வதேசத்தின் ஆதரவிலும் சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் பொது வாக்கெடுப்பு நடைபெறல்.
2. பொது வாக்கெடுப்பு நடைபெறும் வரை, தமிழ் மக்கள் தங்களையும் தங்களுடைய நிலங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதியில் ஒரு இடைக்கால சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறை அமைதல்.
3. இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான இலங்கையின் கொடுமைகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) முறையிட்டு நீதி பெறுதல், அத்துடன் இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) முன் சிறிலங்காவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுத்தல்.

