Skip to content
FGTO
  • Home
  • About
  • News
  • Updates
  • Contact
  • Summits
    • Global Tamil Summit Ottawa 2023
    • Global Tamil Summit New York 2022
Search
FGTO
Close menu
  • Home
  • About
  • News
  • Updates
  • Contact
  • Summits
    • Global Tamil Summit Ottawa 2023
    • Global Tamil Summit New York 2022
FGTO
Search Toggle menu

தமிழ் நாடு முதல்வருக்கு உலக தமிழ் அமைப்புகளின் பேரவையின் வேண்டுகோள்கள்

July 9, 2022 — தமிழ் நாட்டின் மாண்புமிகு முதல் அமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம் !

தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு முதற்கண் எமது பாராட்டுதல்களையும் நன்றியையும் உரித்தாக்குகின்றோம்.

புலம்பெயர்ந்து பல நாடுகளிலும்  வாழும் தமிழர்களின் சார்பில் கீழ்க்கண்டவற்றை தங்களுடைய கவனத்திற்கு கொண்டுவர விழைகின்றோம்:

Federation of Global Tamil Organizations Request to Tamil Nadu Government_Final_July9

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துக்கொண்டு அனைத்துலகத்தின் உதவியை பெரிதும் நாடி கையேந்திக்கொண்டிருக்கும் அதே வேளையில்,  இலங்கை அரசானது தமிழர்களுக்கு எதிரான செயல்களையும் தமிழர்களை அழித்தொழிக்கும் இனப்படுகொலையையும்  எவ்விதமான தொய்வும் இன்றி தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.  வரலாற்றின் அடிப்படையிலான தமிழர்களின் தாயகப் பகுதிகளையெல்லாம் சிங்கள – பவுத்த பகுதிகளாக மாற்றியமைக்கும் திட்டத்தில், தமிழர்களின் நிலங்களையெல்லாம் இலங்கை அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி,  தனதாக்கி வருகின்றது.  தமிழர்கள் மேல் ஏவப்பட்ட இனவழிப்பு போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆகிய பின்பும் இன்றுவரை இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் இருந்து விலக்கப்படாமல் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள அவல நிலை தொடர்கின்றது. பல நூறாயிரங்களுக்கும் அதிகமான  தமிழர்கள் ஈவிரக்கம் சிறிதும் இன்றி இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டனர், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டனர். இதற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.   நீதி எப்பொழுது கிடைக்குமோ? என்று எதிர்நோக்கி தமிழர்கள் காத்துக்கிடக்கின்றனர்.   நீதி விசாரணை நடத்துவதற்கோ அல்லது தமிழர்களுக்கு அரசியல் தீர்வுக்கோ எதற்குமே இலங்கை அரசு ஒப்புக்கொள்வது கிடையாது. 

தமிழ் நாட்டு மக்களும் தமிழ் நாடு சட்டப்பேரவையும் ஈழத்தமிழர்களுக்குப் பலவகைகளிலும் உதவிபுரிந்துள்ளனர் என்பது மிகவும் ஆறுதல் அளிக்கின்றது.  ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது தமிழின அழிப்பு என்றும், இந்த இன அழிப்புக்கு அனைத்துலக நீதி மன்றத்தில் நீதி கிடைக்க வேண்டும் எனவும், அனைத்துலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பொதுமக்கள் வாக்கெடுப்பு ஒன்றே தமிழ் ஈழ சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் தமிழ் நாடு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.  இவற்றையெல்லாம் உலகத் தமிழர்கள் மிக்க நன்றியுடன் நெஞ்சில் நிலைநிறுத்தியுள்ளோம்.

கீழ்க்கண்ட வேண்டுகோள்களை உங்கள்முன் வைத்து அவற்றை நிறைவேற்றித்தருமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்:

  1. இலங்கைத்தீவின் வடகிழக்கில் — தமிழர்களின் பூர்விக தாயக நிலத்தில் — ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். 1948-ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்த பூர்விக தாயக நிலத்தில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும், சிங்களவர்களின் அடக்குமுறையால் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும் அவர்களுடைய வழித்தோன்றல்களும் பங்கு பெற்று, ஈழத்தில் உள்ள அரசியல் சிக்கலைக் களைவதற்கு அமைதியான முறையில் மக்கள் ஆட்சித் தத்துவத்தின் அடிப்படையில் முடிவு செய்வதற்கு ஏற்ப, அனைத்துலகத்தின் ஏற்பாட்டில் ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.  இதற்கு உங்களுடைய சிறந்த ஆதரவும் ஒத்துழைப்பும் வேண்டும். 
  1. மேலே குறிப்பிட்ட பொதுவாக்கெடுப்பு நடைபெறும் வரையில், தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் தங்களையும் தங்களுடைய நிலங்களையும் பாதுகாக்கும் பொருட்டு அனைத்துலகத்தின் சார்பில் ஒரு பாதுகாப்புப் பொறிமுறையை ஏற்பாடு செய்தல் வேண்டும். 
  1. ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலை, மாந்த நேயத்தின் மீது நடத்தப்பட்ட குற்றங்கள், போர்க்குற்றங்கள், வன்கொடுமை தாக்குதல்கள்,  இனத்தின் அடிப்படையில் கொடுமைகள் போன்றவற்றை இழைத்த இலங்கை அரசை உலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court)  நிறுத்தி விசாரித்து உரிய தண்டனை வழங்குதல்; இன அழிப்பைத் தடுப்பதற்கும் இன அழிப்பு நடத்தியவர்களைத் தண்டிப்பதற்குமான சாசனத்தின் படியும், சித்திரவதை வன்கொடுமை இனப்பாகுபாடு ஆகியவற்றைத் தடுப்பதற்கும் இவற்றை இழைத்தவர்களைத்  தண்டிப்பதற்குமான சாசனத்தின் படியும் இலங்கை அரசை உலக நீதிமன்றத்தின் (International Court of Justice) முன் நிறுத்தி விசாரித்து உரிய தண்டனை வழங்குதல் — ஆகியவற்றுக்கு இந்திய ஒன்றிய அரசு தக்க நடவடிக்கை எடுக்க அழுத்தம் தரவேண்டும்.
  1. இலங்கையின் வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே மாகாணமாக செய்வதாக 1987-ஆம் ஆண்டின் இந்திய- இலங்கை ஒப்பந்தத்துக்கு முன்பும், இந்த ஒப்பந்தத்துக்குப் பின்பும் இந்திய அரசு தமிழ் விடுதலைப்போராட்ட வீரர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இந்திய அரசு உறுதி அளித்திருந்தது.  இந்த உறுதியளிப்பை இனியும் காலம் தாழ்த்தாமல் இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்.
  1. இலங்கையில் சிங்களர்-தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு 13-ஆவது சட்டத்திருத்தம் மாமருந்து என்று இந்தியா முன்னெடுப்பது தவிர்க்கப்படவேண்டும் எனவும், நீதிக்கும் அநீதிக்குமான போரில் இந்தியா நடுநிலை வகிக்காமல் நீதிக்குத் துணை நிற்கும் விழுமியத்தைக் கடைப்பிடித்து தமிழர்களின் நீதிக்கும் சுதந்திரத்துக்கும் ஆதரவு நல்கவேண்டும் எனவும் இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.
  1. ஒவ்வொரு ஆண்டும் மே 18-ஆம் நாளை தமிழ் இன அழிப்பு நினைவு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் .

மேற்குறிப்பிட்ட எங்கள் வேண்டுகோள்களை விரைவில் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகின்றோம்.

அன்புடன்,

உலகத் தமிழ் அமைப்புகளின் பேரவை 

Federation of Global Tamil Organizations, http://fgto.org   | (647) 875 7354  | info@fgto.org

Present member organizations: Tamil American United PAC (TAUPAC), Global Tamil Movement (GTM), Ottawa Tamil Association (OTA), Quebec Tamil Development Association (QTDA), World Tamil Organization (WTO), Tamil Genocide Memorial (TGM), ABC Tamil Oli, Ilankai Thamil Sangam-Florida

###

Post navigation

Global Tamil Summit calls for Referendum for Tamil Eelam
Eelam Tamils’ Request

Tweets by global_tamils

About the Federation
Constitution of the federation
Contact Us
News
Member organization updates
To join the federation
Present Members of the federation
News
  • Thank You, Canada – A Step Forward for International Justice for Sri Lanka’s Genocide Against Tamils
  • Tamil Genocide Memorial (TGM) Launches a Digital Archiving Social Platform to Preserve the History of Tamil Eelam
Federation of Global Tamil Organizations © 2023 FGTO.