இப்பொது வேட்பாளர் மூலம், தமிழ் மக்கள் எமது அரசியல் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் சனநாயகமுறையில் உலகறியச் செய்யவும், சர்வதேசமயப்படுத்தவும் நிச்சயம் உதவும் என்பது எமது நம்பிக்கை.
சிங்கள தேசத்தினால் எம்மக்கள் மீது கடந்த 76 வருட காலமாக நடாத்திக் கொண்டிருக்கும் அட்டூழியங்களையும், அநீதிகளையும், இனப்படுகொலைகளையும், ஏமாற்று வழிமுறைகளையும் நாம் எமது அநுபவமாக கொண்டு, சர்வதேச சட்டத்தின் படியும், ஐ. நா. தீர்மானங்களின் மூலமும், ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கும், பூரண சுதந்திரத்திற்கும் தகுதியானவர்கள் என்ற அடிப்படையில், எமது சுதந்திரத்திற்கான அரசியல் தீர்வு, அமைதியாகவும் சனநாயகமுறையிலும், ஐ. நா. அல்லது சர்வதேச சமூகத்தினால் நடாத்தி, கண்காணிக்கப்படுகின்ற ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமாகத்தான் காணப்படல் வேண்டும் என்ற திடமான நம்பிக்கையில் நாம் உள்ளோம்.
ஐக்கிய அமரிக்கா பிரதிநிதிகள் சட்ட சபையில், இவ்வருடம் மே 15 அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவமுள்ள தீர்மானம் 1230, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்களிற்கு சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பின் அவசியத்தை வலுநிறுத்தி நிற்கின்றது. இது, ஈழத்தமிழர்களிற்கு சாதகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாட்டின் திருப்புமுனையின் ஆரம்பமாக கருதப்படுகின்றது.
பொதுவாக்கெடுப்புக்கான பூரண உரிமை எமது மக்களுக்கு உண்டு! அவ்வாறன ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலமாகத்தான் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை நடைமுறைப் படுத்த முடியும். அந்த உரிமையை சர்வதேச ஆதரவுடன் செயல்படுத்த நாம் ஆவன செய்தல் வேண்டும். அதற்கான செயற்பாடுகளிற்கு நாம் எமது பங்கையும் ஆதரவையும் நிச்சயம் கொடுப்போம்.
உங்கள் செயற்பாடுகளையும் முயற்சிகளையும் நாம் கூட்டாக பராட்டி, வரவேற்று வாழ்த்துகின்றோம்.
இவ்வறிக்கை பின்வரும் தமிழ் அமைப்புகளின் கூட்டு வெளியீடு:
-
உலகத் தமிழ் அமைப்புகளின் பேரவை (Federation of Global Tamil Organizations – FGTO)
-
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America – FeTNA)
-
இலங்கைத் தமிழ்ச் சங்கம் (Ilankai Tamil Sangam – ITS)
-
ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு (Tamil Americans United Political Action Committee – Tamil PAC)
-
உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization – WTO)
###